விசா வழங்கல் நிறுவனத்தை நியமிக்க டெண்டர் கோர தேவையில்லை : டிரான் அலஸ்
விசா வழங்குவது தொடர்பான நிறுவனத்தை நியமிக்க டெண்டர் கோர வேண்டிய அவசியமில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிறுவனம்தான் உலகின் பல்வேறு நாடுகளில் விசாவைச் செயல்படுத்தும் ஒரே நிறுவனம்.
குறித்த பிரேரணை கிடைக்கப்பெற்றதையடுத்து, அதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டு, அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறான வீசா கட்டணம் அறவிடப்பட்டாலும் அது அரசாங்கத்துக்கு மீளக் கிடைக்கும் எனத் தெரிவித்த அவர், இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஏகமனதாக வீசாக் கட்டணத்தை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நியமிக்கப்பட்ட நிறுவனம் அவர்கள் வழங்கும் சேவைக்கு மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.