தோட்டத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஜனாதிபதி தொழிலாளர்களோடு …..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்ட முதலாளிகள் வழக்குத் தாக்கல் செய்தால், தொழிலாளர்களின் தரப்பில் இருந்து வழக்குத் தொடர ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாளிகள் தோட்டங்களை கையளிப்பதாக கூறப்படும் வழக்கு தொடர்பில் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து உண்மைகளை முன்வைப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் சட்ட உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் இணை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.

கொட்டகலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததுடன், சம்பள அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலையும் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் வெளியிட்டார்.

தோட்ட நிறுவனங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி உரிய சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.

இலங்கை தோட்டக்காரர்கள் சங்கமும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிக்கையின் போது, ​​தமது சங்கம் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தோட்ட முதலாளிகளின் சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.