காஷ்மீரில் விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​மாவட்டத்தில், நேற்று மாலை 6.15 மணியளவில் இந்திய விமானப்படை வீரர்கள் இரண்டு வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு, விமானப்படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய விமானப்படை வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் உத்தம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு வீரர் ஆபத்தான நிலையிலும், 3 பேர் காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருவதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலை தொடர்ந்து, பூஞ்ச் மாவட்டத்திற்கு விரைந்த ராஷ்ட்ரீய ரைபில்ஸ் படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய விமானப்படையினர் மீது நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விமானப்படை வீரர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்த தாக்குதல் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலதிக செய்திகள்

மொட்டை கைவிட்டு.. ஜனாதிபதியுடன் இணைந்த லொஹான்.

போலி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை.

தோட்டத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஜனாதிபதி தொழிலாளர்களோடு …..

அரபு சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு.

ரணில் – பஸில் இன்றும் சந்திப்பு!

சு.க. ஆட்சி விரைவில் மலரும்! – மைத்திரி இப்படி நம்பிக்கை.

பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி.

இந்தோனேஷியாவின் தொடர்ந்து பெய்யும் கனமழையால் 14 பேர் உயிரிழந்தனர்.

லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு.

Leave A Reply

Your email address will not be published.