துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்ப முயன்றவர் விமான நிலையத்தில் கைது.

ஹொரண துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
ஹொரண கிரேஸ்லண்ட்வத்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் தற்போது ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த தொழிலதிபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்து கெப் வண்டியில் பயணித்த வர்த்தகரை சுட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பிஸ்டல் ரக துப்பாக்கியால் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.