தன்னை அறியாமல் அரளி பூவை சாப்பிட்ட கேரள நர்ஸ் பலி!
கேரளாவில் செல்போனில் பேசியபடி, தன்னை அறியாமல் அரளி பூவை பறித்து சாப்பிட்ட செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்த, செவிலியர் சூர்யா சுரேந்திரன். இவருக்கு அண்மையில் இங்கிலாந்தில் வேலை கிடைத்ததால் அண்டை வீட்டாரிடம் சொல்லிவிட்டு விமான நிலையம் செல்ல முற்பட்டார். அப்போது செல்போனில் பேசியபடியே அங்கு செடியில் இருந்த அரளி பூவைத் தன்னை அறியாமல் பிய்த்து தின்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நெடும்பச்சேரி விமான நிலையம் செல்லும்போது ஆலப்புழாவில் குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்தார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் பருமலையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உடற்கூராய்வில் அரளிப்பூவில் இருந்த விஷம் மாரடைப்பை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோயில்களில் அரளி பூக்களை தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலதிக செய்திகள்
மொட்டை கைவிட்டு.. ஜனாதிபதியுடன் இணைந்த லொஹான்.
போலி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை.
தோட்டத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஜனாதிபதி தொழிலாளர்களோடு …..
அரபு சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு.
ரணில் – பஸில் இன்றும் சந்திப்பு!
சு.க. ஆட்சி விரைவில் மலரும்! – மைத்திரி இப்படி நம்பிக்கை.
பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி.
இந்தோனேஷியாவின் தொடர்ந்து பெய்யும் கனமழையால் 14 பேர் உயிரிழந்தனர்.
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு.
காஷ்மீரில் விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது
2022ம் ஆண்டுக்கான GCE (O/L) மறு ஆய்வு : 2023ம் ஆண்டுக்கான GCE (O/L) தேர்வு தகவல்
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்ப முயன்றவர் விமான நிலையத்தில் கைது.
யாழ்பாண மாடறுப்பு நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார்.
மர்மமான முறையில் இறந்த ஜெயக்குமார்; சிக்கிய 2வது கடிதம் – பரபரப்பு தகவல்!