ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பல்லக்கில் சுமந்த மக்கள் (வீடியோ)
வவுனியாவில் உள்ள மிகவும் கடினமான பாடசாலையான புதுக்குளம் கனிஷ்ட கல்லூரியின் அபிவிருத்திக்காக பெரும் தியாகங்களை செய்த பெண் தலைமையாசிரியை, கடந்த 3ஆம் திகதி ஓய்வுபெற்றதையடுத்து, அவரை கௌரவிக்கும் விதமாக நடந்த விழாவுக்கு ஊரவரால் பல்லக்கில் வைத்து அழைத்து வரப்பட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர் புதுக்குளம் பாடசாலைக்கு தலைமையாசிரியையாக கடமைக்கு இணைந்த திருமதி கமலா சொக்கலிங்கம் புதுக்குளம் கனிஷ்ட கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை உயர்த்தியதோடு , மாணவர்களை பாடங்களுக்கு மேலதிகமாக நல்வழி படுத்தி வெற்றியும் பெற்றுள்ளார். அத்தோடு நடத்தப்பட்ட பாடசாலை விளையாட்டு போட்டிகள் மூலமும் பாடசாலைக்கு புகழைக் கொண்டு வர அயராது உழைத்துள்ளார்.
அவர் ஓய்வு பெற்றதையொட்டி, பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு, குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அவரை அழகாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்லக்கில் சுமந்து, ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர்.
விழாவின் இறுதியில் தலைமையாசிரியை பேசிய தருணம் மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்துள்ளது. ஏனெனில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி ஓய்வுபெற்ற அதிபரும் பிரிவுபசார நிகழ்வில் கதறி கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.