அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது.

இணையதளத்தில் இ-பாஸ் பெற்றுக்கொண்டு உதகை, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேறு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: உதகை மற்றும் கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையதளத்தின் வழியே இ-பாஸ் வழங்கும் முறையைச் செயல்படுத்த வேண்டுமென உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப் பாா்க்கவும் செல்லும் பயணிகள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

வேறு தடையில்லை: சுற்றுலாப் பயணிகள், வணிக ரீதியாக வருபவா்களுக்கு வேறு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். இதற்கு இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். திங்கள்கிழமை காலை 6 மணி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

எப்படி விண்ணப்பிக்கலாம்? வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது தானாகவே இ-பாஸ் கிடைத்து விடும். ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும்.

இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே கொடைக்கானல் செல்வதற்கு பச்சை, நீலம், ஊதா என 3 வண்ணங்களிலான அடையாளக் கோடுகளுடன் இ-பாஸ் வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்பு: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்கள் மே 7 -ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனடிப்படையில், இ-பாஸ் முறையை அமல்படுத்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள், வணிகம், வியாபார வேலையாக வருபவா்களும் இ-பாஸ் பதிவு செய்து கொடைக்கானலில் பயணம் மேற்கொள்ளலாம். இ-பாஸ் தேவைப்படுபவா்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தால், ஆட்டோ ஜெனரேட் மூலம் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கியூ ஆா் கோட் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளில் சுற்றுலா பயணிகளின் பெயா், முகவரி, பயணிக்கும் வாகனம், உடன் வரும் நபா்களின் எண்ணிக்கை, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெளி மாநில, வெளி மாவட்ட பதிவெண் கொண்ட ஒவ்வொரு வாகனமும், இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும். கொடைக்கானலுக்கு வருகை தரும் அரசுப் பேருந்துகளின் விவரங்கள், பயணிகளின் விவரங்கள் நேரிடையாக போக்குவரத்துத் துறை மேலாண்மை இயக்குநரிடமிருந்து பெற்றுக்கொள்ள மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

3 வகையான அடையாளக் கோடுகள்: உள்ளூா் பகுதி பொதுமக்களுக்கு பச்சைநிற அடையாளக் கோடு, வேளாண் விளைபொருள்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை, சரக்கு வாகனங்களுக்கு நீலம் நிற அடையாளக் கோடு, சுற்றுலா, வா்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாளக் கோடு என 3 வகையான அடையாளக் கோடுகளுடன் இ-பாஸ் வழங்கப்படும். ஏற்கனவே கொடைக்கானல் நகராட்சியின்(வெள்ளி நீா்வீழ்ச்சி) சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட உள்ளூா் வாகனங்களுக்கு மே 7 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்துக்கு ‘https://epass.tnega.org/home‘ என்ற இணைய முகவரியில் ஒருமுறை மட்டும் விண்ணப்பித்து உள்ளூா் இ-பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீா்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படும். ‘ ங்ல்ஹள்ள்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணைய முகவரி மூலம் திங்கள்கிழமை (மே 6) காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

மேலதிக செய்திகள்

ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பல்லக்கில் சுமந்த மக்கள் (வீடியோ)

கோட்டாபய அழித்த மாலம்பே இலகு ரயில் கனவு, நனவாகிறது.

அதிகாலை வேளையில் பைக் விளையாட்டுக் காட்டிய இளையோர் சிக்கினர்!

எட்கா ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுகின்ற ஏற்பாடுகள் இரகசியமாக முன்னெடுப்பு – விமல் எம்.பி. குற்றச்சாட்டு.

சு.கவின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரி தீர்மானிக்கவே முடியாது! – தயாசிறி கடும் சீற்றம்.

ஆடை விற்பனை நிலையத்தில் பணப்பையை திருடிய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

விரைவில் அமைச்சராகும் மொட்டுக் கட்சி எம்.பி. யார்?

பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி ஓட்டோ மோதி உயிரிழப்பு!

யாழில் கைபேசி விளையாட்டுக்கு அடிமையான மகனே தனது தாயைக் கொன்றிருக்கலாம்! – பொலிஸார் சந்தேகம்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு’மொட்டு’ பேராதரவு வழங்க வேண்டும்! – எஸ்.பி. கோரிக்கை.

விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய 12 பேர் கைது!

அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

பலாங்கொடையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஹொரணை துப்பாக்கிச்சூடு: வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட பிரதான சந்தேகநபர் மடக்கிப் பிடிப்பு!

Leave A Reply

Your email address will not be published.