விசா வசதி தொடர்பான சர்ச்சைகள் தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Video)
VFS ஒரு இந்திய நிறுவனம் அல்ல! அவர்கள் செய்வது எல்லாம் ஆவணங்களைச் சரிபார்ப்பதுதான்! கவுண்டர்கள் இந்தியர்கள் அல்ல, இலங்கையர்கள்!
இலங்கையின் வருகை விசா வசதி தொடர்பான அண்மைய சர்ச்சைகள் தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட செய்தியாளர் மாநாட்டை நடாத்தியுள்ளார்
அங்கு உரையாற்றிய அமைச்சர், புதிய விசா முறை தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி 2023 நவம்பர் 23ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
விசா கட்டண விவகாரமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாகும், ஆனால் அது 2023 நவம்பரில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் ETA அல்லது மின்னணு பயண ஒப்புதல் முறை மூலம் மாற்றத்தை செயல்படுத்த முடியாது, எனவே நாங்கள் ஏப்ரல் 17 வரை VFS அமைப்பு மூலம் அதை செய்ய காத்திருக்க வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.
ETA அமைப்பில் ஏற்பட்டுள்ள பிழைகள் காரணமாகவே இந்த முறையை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாகத் தெரிவித்த அமைச்சர் மேலும் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
“அந்த பேச்சு 75 டாலர்களைப் பற்றியது.
$75 என்பது 6 மாத விசா, இரட்டை நுழைவு விசா.
ஆனால் எங்கள் தரப்பில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டு இருந்தது. $50க்கு 30 நாள் விசாவுக்கு அறவிட்டோம்.
இதை நாங்கள் நிறைவேற்றியபோது, தகவல்களை கணினியில் வைக்க முடியவில்லை. அதனால்தான் நான் மீண்டும் பாராளுமன்றம் செல்ல நேர்ந்தது. பாராளுமன்றம் செல்லாமல் வர்த்தமானியை வெளியிட முடியாது.
ஒற்றை நுழைவு விசா 30 நாட்களுக்கு $50 ஆகும். நாளை முதல் அது சிஸ்சட்டத்தில் இருக்கும்.
“VFS தொடர்பாக எங்களுக்கு ஒரு முன்மொழிவு அனுப்பப்பட்டது. VFS என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரியும். 151 நாடுகளில் சுமார் 3,300 மையங்களில் 67 அரசாங்கங்கள் பயன்படுத்தும் ஒரு நிறுவனம். அந்த சேவைக்கு போட்டியாக யாரும் இல்லை. அவர்கள் உலகிலேயே நம்பர் ஒன். உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் VFS ஐப் பயன்படுத்துகிறது.
VFS ஒரு இந்திய நிறுவனம் அல்ல. BLACKSTONE மற்றும் Kuoni முக்கிய பங்குதாரர்கள். அவர்கள் யார்? அவர்கள் இலங்கையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பை VFS இன்று வெளியிடவுள்ளது.
மே 1 பிரச்சனை தொடங்கிய போது . கவுண்டரில் இந்தியர்கள் இருந்தார்கள் என சத்தம் போட்டனர். அவர்கள் இந்தியர்கள் அல்ல, இலங்கையர்கள். பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது. 13 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்தியர்கள் என்று கத்தினார். மேலும் VFSசால் விசா வழங்க முடியாது. நிராகரிக்க முடியாது.
VFS குடிவரவு அலுவலகத்தால் செய்யப்படுகிறது. VFS ஆவணங்களை மட்டுமே சரிபார்க்கிறது. ” என்றார் அவர்.