போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ் : எகிப்து மற்றும் கத்தாரில் இருந்து போர் நிறுத்த முன்மொழிவு.

எகிப்து மற்றும் கத்தார் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு இந்த யோசனையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.