ரணிலுக்கு ஆதரவா? – இன்னும் முடிவில்லை என்கிறார் மஹிந்த.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மொட்டுக் கட்சியின் விசேட கூட்டம் நேற்று (07) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், வெற்றி வேட்பாளர் ஒருவரையே தமது கட்சி களமிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.