உலகில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன – நிமல் சிறிபால டி சில்வா.

உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் லாபம் ஈட்டவில்லை என்றும், அது அனைத்து விமான நிறுவனங்களின் சிறப்பியல்பு என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகிறார்.
பணக்கார நாடுகளில் நடத்தப்படும் பிரபல விமான நிறுவனங்கள் கூட லாபகரமாக இல்லை என்றும், சில விமான நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தியாவின் ‘ஏர் இந்தியா’ நிறுவனம் நஷ்டம் அடைந்ததால் டாட்டா நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாகக் கூறிய அவர், எமிரேட்ஸ் நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்திடம் இருந்து ஏறக்குறைய மூன்று பில்லியன் டாலர்களைப் பெறுவதாகவும் கூறினார்.
இதன்படி, இலங்கை போன்ற சிறிய நாடு இவ்வாறான விமான சேவையை நடத்தும் திறன் கொண்டதல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.