டயானாவின் எம்பி நாற்காலி முஜிபுருக்கு – சஜித்
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமாக உள்ள SJBயின் தேசியப் பட்டியல் உறுப்பினருக்கான கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மானை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் சட்டத்தரணியுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்ததும், தேசியப் பட்டியலில் உள்ள வெற்றிடத்தை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பார். இதன்படி, வெற்றிடமாகவுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ள பிரதிநிதி தொடர்பில் ஆணைக்குழு சமகி SJB கட்சியிடம் வினவியதன் பின்னர், அக்கட்சியால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவி விலகினார்.