கதற விட்ட இலங்கை தமிழர் வியாஸ்காந்த்.. தவித்துப் போன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரின் 57 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி நடந்த ஹைதராபாத் மைதானத்தின் பிட்ச்சில் 200 ரண்களை எளிதாக எடுக்கலாம் என கூறப்பட்ட நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அளவிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அந்த அணியில் இலங்கை தமிழரான விஜயகாந்த் வியாஸ்காந்த் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அவர் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார். விக்கெட் வீழ்த்தாத நிலையிலும் அவர் குறைவாக ரன்கள் விட்டுக் கொடுத்தது லக்னோ அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தது. அவரது பந்து வீச்சில் கடைசி ஓவர்களில் மட்டுமே மூன்று பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
அவர் முதலில் வீசிய இரண்டு ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் லக்னோ அணியின் வீரர்கள் க்ருனால் பண்டியா மற்றும் கே எல் ராகுல் தவித்தனர். இதை அடுத்து விஜயகாந்த் வியாஸ்காந்த் யார்? என பலரும் தேடி சமூக வலைதளங்களில் கேட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.
அவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர். அவர் பேட்டிங்கும் செய்யக் கூடியவர். எனவே ஆல் – ரவுண்டராக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இலங்கை தேசிய அணியில் அவருக்கு ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் ஆடும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அதை தவிர்த்து உலகம் முழுவதிலும் உள்ள டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.
மும்பை எமிரேட்ஸ் அணிக்காக இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரிலும், சட்டோகிராம் அணிக்காக பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரிலும், ஜஃப்னா கிங்ஸ் அணிக்காக லங்கா பிரீமியர் லீக் தொடரிலும் அவர் விளையாடி இருக்கிறார்.
இந்த போட்டியில் 166 ரன்களை சேஸிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்களும், 30 பந்துகளில் 89 ரன்களும் எடுத்தனர்.