சு.கவுக்குள் பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றிணைய வேண்டும்! – தயாசிறி எம்.பி. கோரிக்கை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றுபட வேண்டும் எனவும், சந்திரிகா அம்மையாரும் இணைய வேண்டும் எனவும் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“எனக்கு ஜனாதிபதியாக வேண்டும் என்ற கனவு இல்லை. எனக்கான தகுதி என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். கட்சியைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது ராஜபக்ஷ குடும்பத்துக்கோ அல்லது பண்டாரநாயக்க குடும்பத்துக்கோ உரித்தானது அல்ல, அது மக்களின் கட்சி .
எனவே, பல அணிகளாகப் பிளவுபட்டுள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் கட்சியை மீளக் கட்டியெழுப்ப முடியும்.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கென நடைமுறையொன்று உள்ளது. அந்த விதிமுறைகளைக் கருத்தில்கொள்ளாமலேயே மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளார்.” – என்றார்