ரஷ்யாவிற்கு கூலிப்படையை அனுப்பிய மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க கைது!
ஒய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய இராணுவத்திற்கு கூலிப்படையாக அழைத்துச் செல்லும் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தலின் தலைவன் என அடையாளம் காணப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் மேஜர் ஒருவரை
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (08) இரவு குருநாகலில் கைது செய்துள்ளனர்.
பிரசன்ன ரணவக்க என்ற இந்த மேஜர் ஜெனரல் 2022ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவப் பிரிவுத் தளபதி எனவும், மேஜர் சரத் விஜேசிங்க சார்ஜன்ட் எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், வர்த்தகக் கடத்தல் மற்றும் கடல் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் நீண்ட விசாரணையின் பலனாக, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் குருநாகலில் வசிப்பவர்கள் மற்றும் மேஜர் ஜெனரல் குருநாகல் லேக் வீதியில் வசிக்கின்றார். இவர்கள் 500க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கூலிப்படையாக ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக சுமார் 150 பேர் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயிற்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக செய்திகள்
கதற விட்ட இலங்கை தமிழர் வியாஸ்காந்த்.. தவித்துப் போன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
சு.கவுக்குள் பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றிணைய வேண்டும்! – தயாசிறி எம்.பி. கோரிக்கை.
மருதானையில் ரயில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!
யாழ்ப்பாண கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வியாஸ்காந்த்.
மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச தொகையை ஆஸ்திரேலியா உயர்த்தியது.
ஊழியர்கள் மருத்துவ விடுப்பு: ஏர்இந்தியா விமான சேவைகள் ரத்து.
2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்.
NMRA டாக்டர் விஜித் குணசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!