ஆந்திராவில் பிரதமர் மோடி பிரமாண்ட பேரணி… மாஸ் காட்டிய மூன்று தலைவர்கள்…!
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, அடாவடிக்காரர்களுக்கான அரசாங்கமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 4 ஆம் கட்ட தேர்தல் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, ஆந்திராவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுடன் மாநில சட்டமன்றத் தேர்தலும் நடக்கவுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் அனல்பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்குதேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணி, இந்தியா கூட்டணி என்று மும்முனை போட்டி நிலவி வருகிறது. தலைநகர் ஐதராபாத்தில் மட்டும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி போட்டியிடுவதால், அங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்குஇந்நிலையில் ஆந்திராவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, கலிகிரி என்ற பகுதியில் வாகனப் பேரணியில் ஈடுபட்டு தங்களது கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார்.
பிரதமரின் வாகன பேரணியில், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பவன் கல்யாணும் பங்கேற்றனர். பரப்புரையின்போது முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியைக் கடுமையாகச் சாடிய பிரதமர், மக்களுக்கான அரசாக இல்லாமல், அடாவடிக்காரர்களுக்கான அரசாங்கமாகத் திகழ்வதாக விமர்சித்தார்.
அதேபோல ஆந்திராவில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் திருமாவளவன் வாக்குசேகரித்தார். பொன்னூர் தொகுதியில் பானை சின்னத்துக்கு வாக்கு கேட்டு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
மேலதிக செய்திகள்
கதற விட்ட இலங்கை தமிழர் வியாஸ்காந்த்.. தவித்துப் போன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
சு.கவுக்குள் பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றிணைய வேண்டும்! – தயாசிறி எம்.பி. கோரிக்கை.
மருதானையில் ரயில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!
யாழ்ப்பாண கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வியாஸ்காந்த்.
மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச தொகையை ஆஸ்திரேலியா உயர்த்தியது.
ஊழியர்கள் மருத்துவ விடுப்பு: ஏர்இந்தியா விமான சேவைகள் ரத்து.
2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்.
NMRA டாக்டர் விஜித் குணசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
லக்னோ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ரஷ்யாவிற்கு கூலிப்படையை அனுப்பிய மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க கைது!