இரண்டே வார்த்தையில் சஜித்தின் வாயை அடைத்த ரணில்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது விசேட அறிக்கையொன்றை செய்தார்.
அந்த அறிக்கையின் இறுதியில் எதிர்கட்சித் தலைவர் .சஜித் பிரேமதாச ஆட்சேபனைகளை எழுப்பி சில விடயங்களை முன்வைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது எழுந்த ஜனாதிபதி, தன்னால் இயன்ற பணிகளைச் செய்துள்ளதாகவும், ஏப்ரல் 19ஆம் திகதி நீங்கள் பிரதமராக பதவியேற்றிருந்தால், இவை எதுவும் நடந்திருக்காது என சொன்னார்.
“இந்த விடயத்தைப் பற்றி விவாதம் நடத்தினால் நல்லது. இதற்கெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் ஏப்ரல் 10ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்றிருந்தால், இவை எதுவும் நடந்திருக்காதுதானே?” என்றார் ஜனாதிபதி.