நோர்வேயில் இலங்கையர் ஒருவர் காருக்குள் வைத்து எரித்துக் கொலை!

நேற்று (8) நோர்வே நாட்டில் காருக்குள் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் பற்றிய தகவலை நோர்வே பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற நோர்வே பொலிஸ் அதிகாரிகள் குழு, உயிரிழந்தவரின் உடல் பாகங்களை ஆய்வு செய்த போது, பாதி எரிந்த நிலையில் இருந்த இறந்தவரது அடையாள அட்டை காணப்பட்டுள்ளது.
தகவலின்படி உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 6 வருடங்களுக்கு முன்னர் நோர்வேக்கு சென்றிருந்த நிலையில் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து அந்த நாட்டுக்கு அழைத்து வந்து வசித்து வரும் போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது இதுவரை தெரியவில்லை, சம்பவம் குறித்து நோர்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.