கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கொடுத்தால் என்ன ஆகும்? பாயிண்ட்களை அடுக்கிய அமலாக்கத் துறை!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான இடைக்கால ஜாமின் முடிவை உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் பிரமாணப் பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இடைக்கால ஜாமின் வழங்கப்பட வேண்டுமானால், எந்த அரசியல்வாதியையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றப் பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ள கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் குழு, இடைக்கால ஜாமின் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது உத்தரவை ஒத்திவைத்துள்ளதால், அமலாக்கத்துறையின் பிரமாணப் பத்திரத்தை ஏற்று அதை பதிவு செய்ய வேண்டாம் என வலியுறுத்தியது.
இதனிடையே, அமலாக்கத்துறையின் பிரமாணப் பத்திரத் தாக்கல் நடவடிக்கை, சட்ட நடைமுறைகளை அப்பட்டமாகப் புறக்கணிப்பதாகக் குற்றஞ்சாட்டி உச்சநீதிமன்றப் பதிவேட்டில் முறையான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிரான முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது. குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலதிக செய்திகள்
இன்று முதல் ஆங்கில ஆசிரியர் தேர்வு.
பிரபல இராணுவ அதிகாரி பிரசன்ன ரணவக்கவின் பெயரை பாவித்த மேஜர் ஜெனரல் ரணராஜா ரணவக்க கைது.
பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை.