தரையிறங்கிய ஏர் இந்தியா விமான சண்டை… ஊழியர்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கை திடீர் வாபஸ்!
25 ஊழியர்களின் பணி நீக்க ஆணையைத் திரும்பப் பெறுவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டாடா குழுமம் தன் வசமுள்ள ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏஐஎக்ஸ் கனெக்ட், விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களை இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் கடந்த செவ்வாயன்று ஒரே நேரத்தில், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என தகவல் தெரிவித்துவிட்டு விடுப்பு எடுத்தனர். தங்கள் செல்போன்களையும் சுவிட்ச் ஆப் செய்தனர். கடைசி நேரத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையங்களில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமையும் கடும் நெருக்கடி ஏற்பட்டதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 25 ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், பணி நீக்க நடவடிக்கை ரத்து செய்தால் பணியை தொடருவதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றனர். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்களின் பணி நீக்க ஆணையைத் திரும்ப பெறுவதாகவும் நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும் மே 13ஆம் தேதி வரை விமான சேவையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக செய்திகள்
இன்று முதல் ஆங்கில ஆசிரியர் தேர்வு.
பிரபல இராணுவ அதிகாரி பிரசன்ன ரணவக்கவின் பெயரை பாவித்த மேஜர் ஜெனரல் ரணராஜா ரணவக்க கைது.
பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை.
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கொடுத்தால் என்ன ஆகும்? பாயிண்ட்களை அடுக்கிய அமலாக்கத் துறை!
பட்டாசு ஆலை வெடி விபத்து ; 10 பேர் உயிரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!