அநுரவின் தேசிய மக்கள் சக்தி பிளவுபடுமாம்! – மஹிந்த அணி ஆரூடம்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி விரைவில் பிளவுபடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரூடம் கூறியுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது:-
“ஜே.வி.பியில் இருந்து விமல் வீரவன்ஸ வெளியேறினார். அதன்பின்னர் சோமவன்ச அமரசிங்க சென்றார். மற்றுமொரு குழு பிரிந்து சென்று முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கியுள்ளது. விரைவில் தேசிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு பிளவு ஏற்படும்.
ஜே.வி.பி. ஒரு வழியிலும், தேசிய மக்கள் சக்தி மற்றுமொரு வழியிலுமே பயணிக்கின்றது.” – என்றார்.