இந்தியத் தூதுவர் – சிறீதரன் எம்.பி. சந்திப்பு!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் கொழும்பில் இன்று சந்திப்பு நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது எக்ஸ் பக்கத்தில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்கால அரசியல் நிலவரம், வடக்கு, கிழக்கு அடங்கலாக இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களை மையப்படுத்திய விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்திய மக்களுக்காக இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா இதன்போது வலியுறுத்தியுள்ளார் என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் எக்ஸ் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.