ஜனாதிபதித் தேர்தலுக்கு மொட்டுக் கட்சி தயாராம்! – வேட்பாளர் குறித்து இன்னமும் முடிவில்லை என்கிறார் பஸில்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயார் என்று கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனினும், இதுவரையில் வேட்பாளரைத் தெரிவு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நாட்டுக்காக யாருடனும் இணைந்து செயற்படத் தயார் என்றும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாட்டு நிலையம் பத்தரமுல்லை – ஜயந்திபுர மாவத்தையில் நேற்று (10) திறந்து வைக்கப்பட்டது.

கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில் தம்மிக்க பெரேரா உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தல் செயற்பாட்டு நிலையங்கள் தொகுதி மட்டத்திலும் திறக்கப்படவுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு விரிவான பிரசாரப் பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் பொதுஜன பெரமுன மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.