டெலிபோன் சின்னத்தை தொலைப்பாரா சஜித்? SJB சிக்கலில்… நீதிமன்றம் செல்லும் டயனாவின் கணவர் சேனக சில்வா.
SJB கட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்படப் போவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகேவின் கணவர் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு எந்த சந்தர்ப்பமும் வழங்கப்பட மாட்டாது எனவும் அதற்கான சட்ட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட அந்தஸ்து தொடர்பாக பல சர்ச்சைக்குரிய நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கும் என்றும், கட்சியின் அதிகாரத்தை தானே கைப்பற்றுவேன் என்றும் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.