கிரிப்டோ நாணயம் இலங்கையில் சட்டவிரோதமானது – மத்திய வங்கியின் ஆளுநர்.
இலங்கையில் கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமானது அல்ல என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த நாணயங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகக் காணமுடியவில்லை என்று கூறும் அவர், இந்த நாணயங்களைப் பயன்படுத்துவது அபாயகரமானது எனவும் அவர் கூறுகிறார்.
கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்தவர்கள் பணத்தை இழந்து நஷ்டம் அடைந்துள்ளதாகவும், சிலர் பணத்தை பயன்படுத்தி மோசடிகளில் சிக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கையில் கிரிப்டோ நாணயத்தின் பயன்பாடு தொடர்பில் மத்திய வங்கி உரிய அம்சங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.