மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை.. மின்சார வயர் உரசி பலியான தம்பதி..!

மதுரையில் பலத்த காற்றால் அறுந்து விழுந்த மின்சார வயர் உரசியதில் கணவன் மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை டி.வி.எஸ். நகர் துரைசாமி சாலையில் வசித்து வந்த முருகேசன் – பாப்பாத்தி தம்பதியினர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தனர். நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடையை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். பலத்த காற்று வீசிய போது அப்பகுதியில் மின்சார வயர் அறுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அறியாத அவர்கள், இருட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது சாலையின் நடுவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மின்வயர் பட்டு மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக செய்திகள்
இந்தியத் தூதுவர் – சிறீதரன் எம்.பி. சந்திப்பு!
யாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதுண்டு சாவு! (படங்கள் – வீடியோ இணைப்பு)
தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!
மொட்டுவின் வேட்பாளரே 9 ஆவது ஜனாதிபதி! – கட்சியின் செயலர் கூறுகின்றார்.
ரெஜிஸ்டார் பதிவில் இல்லாத டயானாவின் ‘தென் கொழும்பு’ பிரிவில் பிறந்த போலிப் பிறப்பு சான்றிதழ்.
டெலிபோன் சின்னத்தை தொலைப்பாரா சஜித்? SJB சிக்கலில்… நீதிமன்றம் செல்லும் டயனாவின் கணவர் சேனக சில்வா.
கிரிப்டோ நாணயம் இலங்கையில் சட்டவிரோதமானது – மத்திய வங்கியின் ஆளுநர்.