யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி தலைமறைவு!

குழந்தையைப் பிரசவித்த பாடசாலை மாணவி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டுச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி, துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தார் எனது தெரிவித்து 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தைப் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று காலை தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.