சஜித் மற்றும் மத்துமபண்டார நீக்கப்பட்டு தகுதியானவர்களுடன் SJB கட்சி தொடரும் – யனாவின் கணவர் சேனக.

கட்சி யாப்பின் பிரகாரம், கட்சியில் பதவி வகிக்க தகுதியற்ற சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும்பண்டார மற்றும் தகுதியற்றவர்கள் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு பொருத்தமான நபர்களை நியமித்து கட்சி தொடர்ந்தும் பேணப்படும் என தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரும் அவர்கள் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் சேனக டி சில்வா கூறினார்.

டயானா கமகேவும் நானும் எமது கட்சியை SJB கட்சியை வழங்கி சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவராக்கி விட்டு ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு பொதுச் செயலாளர் பதவியை வழங்கினோம்.

அந்த பதவிகள் 2020.02.03 அன்று கையொப்பமிடப்பட்டு எம்மால் வழங்கப்பட்டன.

அப்போது சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர். கட்சியின் அரசியலமைப்பு மாற்றப்பட்டு இருவரும் கட்சியில் இணைந்தனர்.

கட்சியை வழிநடத்தும் அதிகாரம் கட்சிக்கு வழங்கப்பட்டது. நாங்கள் கட்சியின் வாழ்நாள் உறுப்பினர்கள். அதன்பிறகு கட்சி சாசனத்தை மாற்றி, இந்த கட்சியில் இருந்தால் வேறு எந்த கட்சியிலும் இருக்க முடியாது, இந்த கட்சியில் இருந்தால் தான் இந்த கட்சியில் இருக்க முடியும், இல்லாவிட்டால் அனைவரின் பதவிகளும் ஒழிக்கப்படும் என்று ஷரத்து ஒன்றை இணைத்தோம் .

இப்போது அவர்கள் தங்களுக்கான குழியை தாமே வெட்டிக் கொண்டனர். இப்போது இந்த கட்சியினது அரசியலமைப்பின் படி யாரும் இரு கட்சிகளில் இருக்க முடியாது. சஜித் பிரேமதாசவோ, ரஞ்சித் மத்துமபண்டாரவோ இந்தக் கட்சியில் இனி இருக்க முடியாது, ஒருவர்தான் இருக்க முடியும். ஹர்ஷ டி சில்வாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறோம். கட்சி தடை செய்யப்படாது. இவர்களின் பதவிகளை பறித்து எமக்கு தேவையானவர்களை நியமித்து எமது கட்சியை முன்னெடுத்து செல்வோம் என்றார் டயனாவின் கணவரான சேனக டி சில்வா.

Leave A Reply

Your email address will not be published.