பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன உரிமம் வழங்குவது ரணிலின் கையில்…
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கையை முன்வைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் தாம் தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக சபாநாயகர் பாராளுமன்ற குழுவில் தெரிவித்துள்ளார்.
116 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப்பட்ட வாகன அனுமதிப்பத்திரம் வழங்குமாறு கோரி சபாநாயகரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரக் குழுவிலும் விவாதிக்கப்பட்டது.
எனினும், இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.