SJB டயாவின் சொத்து பூர்வீக சொத்து அல்ல : ரஞ்சித் மத்தும பண்டார.

SJB டயானா கமகே அல்லது அவரது பூர்வீக சொத்து அல்ல அல்ல என SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.

ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் நேற்று (10) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது SJBயின் உரிமை மற்றும் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் நீண்ட விளக்கமளித்தனர்.

ரஞ்சித் மத்தும பண்டார தனது விளக்கத்தை பின்வருமாறு வழங்கினார்.

“SJB டயானா கமகேவுக்கு சொந்தமான கட்சி அல்ல. இக்கட்சியின் அறங்காவலர் குழுவில் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியஆராச்சி ஆகியோர் இருந்தனர். அதன் பின்னர் டயானா கமகேவின் நண்பர் ஒருவர் இந்தக் கட்சியின் தலைவராக வந்துள்ளார்.

2019-2020ல் இந்தக் கட்சியைப் பற்றி ஒப்பந்தம் செய்தோம். நம் நாட்டில் ஒரு அரசியல் கட்சியை நிறுவ நான்கு ஆண்டுகள் ஆகும். பொதுவாக, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியைப் பெற்று, அதற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதுதான் இந்த நாட்டில் உள்ள அமைப்பு. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அவ்வாறே செயற்பட்டது.

2020 இல் இது தொடர்பாக ஒரு சிக்கல் எழுந்தது. இந்த கட்சி சட்டபூர்வமானது அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நண்பர்கள் குழு நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் தீர்ப்பளித்து , இந்த கட்சி சட்டபூர்வமானது என்று கூறி ஐக்கிய தேசியக் கட்சியின் நண்பர் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தேர்தலுக்கு முன்னர் இக்கட்சி சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்சி என்றும், இக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச என்றும், இக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து எழுத்துமூலக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

அப்படித்தான் கடந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தோம். SJBயின் அந்த வேட்புமனுக்களில் நானும் கையெழுத்திட்டேன். எனவே இப்போது நீங்கள் சொல்லும் யாருக்கும் இந்த கட்சிக்கு உரிமை இல்லை. அப்படியானால், ஜி.எல். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) தலைவர் , அந்தக் கட்சி என்னுடையது என்றும் அவர் கூறலாம்.

புத்திசாலி என்பதால் அப்படி அவர் சொல்லவில்லை.

இந்த கட்சிக்கு யாருக்கும் சட்டப்படி உரிமை இல்லை. யாராலும் எதுவும் செய்யவும் முடியாது.

கட்சியின் சட்டபூர்வமான தன்மை குறித்து சட்டப் பகுப்பாய்வு செய்யும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கீழ் கண்டவாறு கருத்து தெரிவித்தார்,

டயானா கமகே எமது தேசிய முன்னணியின் தலைவராக இருக்கவில்லை. அதற்கு முன்னர் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியஆராச்சி ஆகியோரே இருந்தனர்.

ஒரு கட்சியின் பதிவு தொடர்பாக குடியுரிமை இல்லாத ஒருவர் பதிவு செய்ய முடியாது என நம் நாட்டின் சட்டம் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் குடிமகனாக மாறாமல் செய்ய முடியாத விஷயங்கள் உள்ளன. தேர்தலில் போட்டியிட முடியாது,… தேர்தலில் வாக்களிக்க முடியாது… பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது… பாராளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது… இவைகளை செய்ய நீங்கள் இலங்கையின் குடிமகனாக இருக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.