குவைத்திலிருந்து ஹட்டன் மக்கள் வங்கிக்கு 2 வருடங்களாக அனுப்பிய 13 இலட்சம் மாயம் : பகவந்தலாவ பெண் தற்கொலை முயற்சி!

குவைத்தில் இரண்டு வருடங்கள் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்து , தனது மாதாந்த சம்பளத்தை ஹட்டன் மக்கள் வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட தனது கணக்கில் வரவு வைத்ததாகவும், அவர் இலங்கைக்கு வந்து குறித்த பணத்தின் ஒரு பகுதியை வங்கி பெற்றுக் கொள்வதற்காக சென்ற போது, கணக்கில் மீதி 1046 ரூபா மாத்திரமே இருந்ததாக பக்வந்தலாவ ,எல்பொட வத்தபகள பிரதேசத்தைச் சேர்ந்த நித்யஜோதி என்ற பெண் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
17.05.2022 அன்று குவைத் நாட்டில் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்றதாகவும், குடும்பத்தின் பொருளாதாரச் சிரமங்களையும், தான் வசிக்கும் வீட்டையும் சீர்செய்யும் நோக்கில், வேலையில் இணைந்தது அன்றைய தினத்திலிருந்து பெற்ற மாதச் சம்பளத்தையும் உள்ளூர் வங்கியின் ஊடாக ஹட்டன் மக்கள் வங்கியில் உள்ள அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டது , என அவர் கூறியுள்ளார் .
அவ்வாறு வரவு வைக்கப்பட்ட தொகை ரூ.13,44859/= (பதின்மூன்று இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்து எண்ணூற்று ஐம்பத்தி ஒன்பது) என அவர் குறிப்பிட்டுள்ளார்.