டயானாவின் திருமணமும் பொய்.. டயானா , தனது கணவர் என சொல்லும் சேனகவின் மனைவி உக்ரைன் நாட்டுப் பெண்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகேவின் இலங்கைப் பிரஜாவுரிமை மாத்திரமன்றி இந்நாட்டு திருமணமும் பொய்யானது என அபிநவ மக்கள் முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
திருமதி டயனகமகே , சேனக த சில்வா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் , சேனக த சில்வா சட்டப்பூர்வமாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சேனக த சில்வா உக்ரேனிய பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த திருமணத்தில் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தகவல் உள்ளது என்றார் அவர்.
குறித்த பெண் தற்போதும் இலங்கையில் உள்ள மற்றோர் வீடொன்றில் இருப்பதாகவும், இந்த இரண்டு பெண்களுடன் சேனக த சில்வா வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.