இஸ்ரேல் அடக்கமாக இருக்கவில்லை என்றால் அடுத்து அணு ஆயுத தாக்குதல் ஈரான் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் இன்னும் அடக்கமாக இருக்கவில்லை என்றால் அடுத்து அணு ஆயுத தாக்குதல் தான் என ஈரான் எச்சரித்துள்ளது. அணு ஆயுதம் கொண்டு தாக்கும் எண்ணம் இல்லை என்றாலும் அதே நேரத்தில் எங்களுக்கான அச்சுறுத்தல் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கையில் மாற்றம் எடுக்க யோசிக்க மாட்டோம் என ஈரான் அணுசக்தி ஆலோசகர் கமல் ஹராசி இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் ஆதரவு ஹொஸ்பெல்லா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின்போது, சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துாதரகம் தாக்கப்பட்டது. இதைஅடுத்து, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.
கடந்த ஏப்ரலில் இஸ்ரேல் டமாஸ்கஸ் மீது ஈரான் தொடுத்த டூரோன் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதுவரை 34 ஆயிரத்துக்கும் மேல் பலி !
இதற்கிடையில் மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய தாக்குதலில் காசாவில் இதுவரை 34 ஆயிரத்து 971 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ஈரானின் இந்த அணுஆயுத எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.