யாழ். பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் (Photos)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டமைக்கமைய இன்று காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலில் போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.