அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விரிவுரை.
அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விரிவுரை ரீதியான பயிற்சிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் 2020இன் கீழ் நாடளாவிய ரீதியில் கடமைக்காக அறிக்கையிட்ட பட்டதாரிகளிற்கான பயிற்சிகள் ஐந்து பிரிவுகளாக நடைபெற்றுவருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக முதற் கிழமை குறித்த பிரதேச செயலகங்களிலும், இரண்டாவது கிழமை ஏனைய அரச திணைக்களங்களிலும் பயிற்சி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது கிழமை அரச நிறுவனங்களின் துறைகள் தொடர்பான விரிவுரை ரீதியான பயிற்சியினை இன்று(28) திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க. விமலநாதன் அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளதுடன் வளவாளராகவும் கலந்து கொண்டு திணைக்களத்தின் நோக்கத்தை அடைந்து கொள்ளும் பொருட்டு உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்புக்களை விளக்குதல் தொடர்பாக விளக்கமளித்தார். குறித்த செயலமர்வில் மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.
மதிய நேர வளவாளராக மாவட்ட செயலக கணக்காளர் த.ராஐPவன் அவர்கள் கலந்து கொண்டு உற்பத்தித்திறன் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார். இலங்கையின் தேர்தல் வரலாறு தொடர்பாக மாவட்ட செயலக உற்பத்தித் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.கணேந்திரன் அவர்கள் விளக்கமளித்தார்.
அடுத்து வரும் நாட்களில் இச் செயலமர்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.