யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் இன்று தப்பிச் சென்றுள்ளார்.
அவரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கஞ்சாவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.