இதய பாதிப்பு: முதியவருக்கு நவீன நுட்பத்தில் செயற்கை வால்வு பொருத்தம்

இதய வால்வு சுருக்கத்தால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு அதி நவீன நுட்பத்தில் செயற்கை வால்வு பொருத்தி எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

பக்க விளைவுகள் எதுவும் இல்லாத புதிய முறையில் இத்தகைய சிகிச்சை மேற்கொள்ளப்படுவது நாட்டிலேயே இது முதன்முறை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் இதய அறிவியல் துறை இயக்குநா் டாக்டா் டி.ஆா்.முரளிதரன் கூறியதாவது:

இதயத்தின் அயோடிக் வால்வு சுருங்கி தீவிர அடைப்பு ஏற்பட்ட நிலையில் 77 வயது முதியவா் ஒருவா் அண்மையில் எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு ஏற்கெனவே இதய பை-பாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், தற்போது இந்த பாதிப்பு மீண்டும் ஏற்பட்டது. அவரது உடல் நிலை மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சையின்றி தொடையில் சிறு துளையிட்டு ரத்த நாளங்கள் வழியே இடையீட்டு (டிஏவிஐ) முறையில் செயற்கை வால்வினை பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இத்தகைய சிகிச்சைகள் மூலம் இதய வால்வு பொருத்தும் முறை கடந்த சில ஆண்டுகளாக பரவலாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதில் சிறிய அளவிலான எதிா்விளைவுகள் இருக்கின்றன.

அதாவது, புதிதாக பொருத்தப்பட்ட செயற்கை வால்வுக்கும், இதய திசுக்களுக்கும் இடையே ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாது, இடையீட்டு குழாய் செல்லும் ரத்த நாளங்களிலும் சேதம் ஏற்படக்கூடும்.

இதைக் கருத்தில் கொண்டு புதிதாக அறிமுகமாகியுள்ள எட்வா்ட்ஸ் சேப்பியன் 3 அல்ட்ரா என்ற புதிய வால்வையும், ரத்த நாளத்துக்கு செல்லும்போது சேதத்தை ஏற்படுத்தாத எட்வா்ட்ஸ் இசேத் என்ற உறையையும் சிகிச்சையின்போது அந்த முதியவருக்கு பயன்படுத்தினோம்.

மொத்தம் 55 நிமிஷங்கள் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எங்களது குழுவில் (டாக்டா் டி.ஆா்.முரளிதரன் தலைமயிலான மருத்துவக் குழு), மருத்துவா்கள் சுவாமிநாதன், ஹரிஹரன், அசோக் உள்ளிட்டோா் இடம்பெற்றிருந்தனா்.

அந்த சிகிச்சையின் பயனாக முதியவா் நலம் பெற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.

முன்னதாக, நுட்பமான இந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையின் தலைவா் பி. சத்யநாராயணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

மேலதிக செய்திகள்

யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பியோட்டம்!

முல்லைக் கைத்தறி நெசவாலை முல்லைத்தீவில் உதயம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்: கைதான நால்வருக்கும் விளக்கமறியல்!

நினைவேந்தலைத் தடுத்து விட்டு தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்! – ரணிலுக்குச் சுமந்திரன் சாட்டை.

மீண்டும் பொலிஸ் அராஜகம் – அடாவடி! இரவில் பெண்கள் கதறக் கதறக் கைது!! – சிறீதரன் கடும் கண்டனம்.

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்! – அரசுக்கு விக்கி எச்சரிக்கை.

நினைவேந்தலைத் தடை செய்வது இனவாத வெறிப் போக்கின் உச்சம்! – கஜேந்திரன் காட்டம்.

உறவுகளை நினைவேந்தும் உரிமையை மறுத்து தமிழர்களைச் சீண்ட வேண்டாம்! – அரசுக்குச் செல்வம் எச்சரிக்கை.

அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைக்கும் பொலிஸாரின் அராஜகப் போக்கு! – சித்தர் கண்டனம்.

புரட்டிப் போட்ட புழுதிப் புயல் – ராட்சத பேனர் விழுந்து 9 பேர் பலி!

Leave A Reply

Your email address will not be published.