கெஜ்ரிவால் இல்லத்தில் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக புகார்

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில், மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவியாக இருந்த ஸ்வாதி மலிவால் அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் திங்கட்கிழமை காலை முதலமைச்சரை சந்திக்க சென்றபோது முதலமைச்சரின் உதவியாளரான பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக டெல்லி போலீசுக்கு தொலை பேசி மூலம் புகார் அளிக்கப்பட்டது

ஆனால் தாக்குதல் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் பிபவ் குமார் டெல்லி முதலமைச்சரின் வீட்டில் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை பாஜக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். முதலமைச்சரின் இல்லத்தில் பெண் எம்பி தாக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், தலைநகர் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

அதில், கெஜ்ரிவாலின் கேரண்டி என 10 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தனது கைது காரணமாக, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

முதல் வாக்குறுதியாக, நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்றும், ஏழை மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இலவச கல்வி மற்றும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் எனவும் ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்துள்ளது.

மேலதிக செய்திகள்

யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பியோட்டம்!

முல்லைக் கைத்தறி நெசவாலை முல்லைத்தீவில் உதயம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்: கைதான நால்வருக்கும் விளக்கமறியல்!

நினைவேந்தலைத் தடுத்து விட்டு தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்! – ரணிலுக்குச் சுமந்திரன் சாட்டை.

மீண்டும் பொலிஸ் அராஜகம் – அடாவடி! இரவில் பெண்கள் கதறக் கதறக் கைது!! – சிறீதரன் கடும் கண்டனம்.

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்! – அரசுக்கு விக்கி எச்சரிக்கை.

நினைவேந்தலைத் தடை செய்வது இனவாத வெறிப் போக்கின் உச்சம்! – கஜேந்திரன் காட்டம்.

உறவுகளை நினைவேந்தும் உரிமையை மறுத்து தமிழர்களைச் சீண்ட வேண்டாம்! – அரசுக்குச் செல்வம் எச்சரிக்கை.

அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைக்கும் பொலிஸாரின் அராஜகப் போக்கு! – சித்தர் கண்டனம்.

புரட்டிப் போட்ட புழுதிப் புயல் – ராட்சத பேனர் விழுந்து 9 பேர் பலி!

Leave A Reply

Your email address will not be published.