இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்
பலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக அநீதி இழைக்கப்படும் பலஸ்தீன மக்களுடன் இன, மத வேறுபாடின்றி இணைந்து நிற்பதாக இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதல்களையும் படுகொலைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பலஸ்தீனர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இஸ்ரேலிய அரசாங்கம் கொலைகார அரசாக பலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து அரச பயங்கரவாதத்தை நடத்தியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பாலஸ்தீன மக்களின் சார்பில் இந்த தாக்குதலை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமை போர் நிறுத்தத்திற்குப் பிறகு உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
இஸ்ரேல் அரசாங்கம் பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளதாகவும், பலஸ்தீனர்களின் தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிப்பதாகவும், கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமரிடம் கோருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.