யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு – காரணம் இதுதான்!
காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தனது கையை உடைத்ததாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். மேலும் போலிசார் ஒரு நாள் நீதிமன்ற காவலில் எடுத்து சவுக்கு சங்கரை விசாரித்தனர்.
இந்நிலையில் கோவையில் யூடியூபர் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 31.10.2023 அன்று Red Pix யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி, இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நேதாஜி பேரவையை சேர்ந்த வழகறிஞர் முத்து என்பவர் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகரம் பந்தய சாலை காவல் நிலையத்தில் 153, 153(A)(1)(a), 153(A)(1)(b)504, 505(ll)IPC ACT ஆகிய சட்டப்பிரிவுகளில் யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளநிலையில், இரண்டாவது வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
சூரிய வெடிப்பை படம் பிடித்த ஆதித்யா எல்-1… புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!