முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கைது..

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது மகனின் பெயரில் போலியான தேசிய அடையாள அட்டையை வேறொரு நபருக்கு தயாரித்து இரண்டு வங்கிகளில் முப்பத்து நான்கு இலட்சம் ரூபாவை கடனாக பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தரின் மகன் ஒருவர் தனது பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்துள்ளதாக முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.