சவுக்கு சங்கர் விவகாரம் : பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சவுக்கு சங்கர் நேர்காணலை ஒளிபரப்பிய வழக்கில் ரெட் பிக்ஸ் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டு விட்டதால் அவரது முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு முன்ஜாமின் கேட்டு பெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லியில் பெலிக்ஸ் தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்டார். இதனிடையே பெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று நீதிபதி சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் அவரது முன் ஜாமின் மனு காலாவதி ஆகிவிட்டது என்று தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சக்திவேல், ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலதிக செய்திகள்

வேதனையோடும் நீதி எதிர்பார்ப்போடுமே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! – சம்பூர் சம்பவத்துக்குப் பொதுக்கட்டமைப்புக் குழு கடும் கண்டனம்

கல்முனைக்கு அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம்… நிர்மாணப்பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்புரை!

யாழ் வைத்தியசாலையில் குழந்தையை விட்டு ஓடிய சிறுமி , சிறுமியின் தாய்,கர்ப்பமாக்கிய இளைஞன் ஆகியோர் கைது.

துப்பாக்கியால் சுடப்பட்ட பிரதமர் ஃபிக்கோவின் உயிருக்கு ஆபத்தில்லை – ஸ்லோவாக்கிய அமைச்சர்.

எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்: சாய் பல்லவி.

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்றார் லாரன்ஸ் வோங்.

நினைவேந்தலைத் தடுக்கக் கூடாது! – ரணிலே ஒப்புதல்.

இளம் குடும்பப் பெண் வழுக்கி வீழ்ந்து பரிதாபச் சாவு!

மிகவும் கடினமான சூழலில் இருக்கின்றார்கள் தமிழர்கள்! – யாழில் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு.

300 பேருக்கு சிஏஏ சட்டம் மூலம் இந்திய குடியுரிமை வழங்கிய மத்திய அரசு

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிரடி உத்தரவு!

Leave A Reply

Your email address will not be published.