O/L பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.
ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 14 மாணவர்களுக்குப் புவியியல் வினாத்தாளில் சில பிரிவுகள் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல், இரணடு விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பரீட்சை மேற்பார்வையாளர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் முறைப்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை நேற்றுமுன்தினம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் பரீட்சையில் பிழைகள் காணப்பட்டன என்றும், பரீட்சை நிலையங்கள் சிலவற்றில் மோசடிகள் இடம்பெற்றன என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில், மினுவாங்கொடை கல்வி வலயத்தின் அல்ஹமான் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் தமிழ் மொழி மூலப் பரீட்சையில் தோற்றிய 14 மாணவர்களுக்குப் புவியியல் பாடத்தின் முதலாவது வினாத்தாள் மற்றும் வரைப்பட பகுதி வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.