முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அமைதியான பிரார்த்தனைக்கு ஆறு. திருமுருகன் வேண்டுதல்!

முள்ளிவாய்க்கால் அவலத்தில் உயிர் நீத்த அனைத்து ஆத்மாக்களையும் நினைந்து அமைதியான முறையில் பிரார்த்தனை செய்யுங்கள் என அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் கலாநிதி.ஆறு.திருமுருகன் அறிக்கை ஒன்றின் மூலம் கோரியிருக்கின்றார்.
“அவலமாக இறந்தவர்களுக்கான இறுதிக்கடன்களோ, அவர்களுக்கான சமய வழிபாடுகளோ நிறைவேற்ற முடியாத துயரத்தோடு உறவுகளை இழந்தவர்கள் வேதனையுறும் நிலையில் மனிதாபிமான பிரார்த்தனையை அனைவரும் செய்ய வேண்டியது தார்மீகக் கடமையாகும். எனவே, அனைத்து மக்களும் வேறுபாடின்றி ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். உருக்கமான வழிபாட்டை யாரும் குழப்பாதீர்கள். வழிபாட்டு நாளை அரசியல் விடயமாகக் கொள்ளாமல் அனைவரும் அமைதியகப் பிரார்த்திக்க வேண்டும்.
சைவ மக்கள் பிதிர்களை நினைந்து வழிபாடு செய்யும் மரபுக்கமைய ஆலயங்களில் மோட்ச அர்ச்சனகளைச் செய்து வழிபாடு செய்யுங்கள். உலகில் எவருக்கும் இத்தகைய அவலங்கள் ஏற்படக்கூடாது என அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக.!”
– இவ்வாறு கலாநிதி.ஆறு.திருமுருகன் தமது அறிக்கையில் கோரியிருக்கின்றார்.