யாழில் குருக்களின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற கொள்ளையர்கள்!

யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் ஆலய குருக்கள் ஒருவருடைய இரண்டு பவுண் சங்கிலியைக் கொள்ளையர்கள் அறுத்துச் சென்றிருக்கின்றனர் என்று சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குருக்களுடைய வீட்டுக்குச் சென்ற இருவர் சாதகம் எழுத வேண்டும் எனக் கூறி குருக்களை நெருங்கி அவருடைய கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பித்திருக்கின்றனர் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.