ரஷ்யாவிற்கு கூலிபடையினராக படையினரை அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் -முகாமையாளர் கைது.

ரஷ்ய இராணுவத்தில் சேவையாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய நுகேகொட பிரதேசத்தில் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும், அதன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசாவில் ரஷ்ய இராணுவத்தில் சிவில் சேவைக்காக இலங்கையர் ஒருவருக்கு தலா 15 இலட்சம் ரூபா அறவீடு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் , அந்த இலங்கையர்கள் அந்நாட்டில் ரஷ்ய உக்ரைன் போரின் போர் முனைக்கு செல்ல நேரிட்டதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது. .

இந்த முகவர் நிறுவனத்தினால் ஆள் கடத்தல் தொடர்பில் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற 7 முறைப்பாடுகளின் பிரகாரம், இந்த நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.