கட்டுநாயக்க ஊழியர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தேன் – பிரசன்ன ரணவீர.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப் பொதிகளை ஏற்றிச் சென்ற நபரை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
‘நான் உண்மையில் என் மனைவியை வெளியூர் அனுப்பச் சென்றேன். இரண்டு பேக்கள் இருந்தன. ஒரு போர்ட்டர் வந்த போது அந்த இரண்டு பைகளையும் நான்தான் தள்ளுவண்டியில் வைத்தேன்.
நான் பணம் கொடுத்த பிறகு, பணம் போதாது, கொண்டு போக முடியாது என்றார். அப்போது எனக்கு கோபமாக வந்தது.
எங்களைப் போன்றவர்களுக்கு இப்படி செய்தால், அப்பாவி ஏழைகளுக்கு எப்படி செய்வார்கள்? என்று சொல்லி அவனை ஓரமாக அழைத்துச் சென்று காதில் அடித்தது , உண்மைதான். அதன் பின்தான் அந்த ஆள் என்னை அடையாளம் கண்டுகொண்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஒரு போர்ட்டர் ஆயிரம் ரூபாவை அறவிடுவதாக விளம்பர பலகையில் காட்டப்பட்டுள்ளன.
அவருக்கு எழுநூறு ரூபாவை இராஜாங்க அமைச்சர் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.