இராணுவத்தை பாதிக்கு மேல் குறைக்க ஜனாதிபதியும் பாதுகாப்பு சபையும் தயார்!
நாட்டில் உள்ள 2 லட்சத்து ,8 ஆயிரம் துருப்புக்களின் எண்ணிக்கையை பாதிக்கு மேல் குறைத்து 2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தை 1 லட்சமாக கொண்டு வர எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பாதுகாப்பை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விளக்கமளிக்கிறார்.
எவ்வாறாயினும், தற்போதுள்ள புவிசார் அரசியல் நிலைமைகளின் கீழ் கடற்படை மற்றும் விமானப்படையை மேலும் பலப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ,
“போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து எமது நாட்டுக்கு ஏற்ற இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு சபையின் நம்பிக்கையாகும். அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ”
அதன்படி, எங்களிடம் 2 லட்சத்து ,8 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். ஒரு லட்சம் வரை கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை.
நாங்கள் யாரையும் ஒதுக்கி வைக்கப் பார்க்கவில்லை. எண்ணிக்கையில், ராணுவத்தில் இயற்கையான குறைவைக் கணக்கிட்டு, 2030க்குள், ராணுவத்தை 1 லட்சம் அளவில் வைத்திருக்க வேண்டும் என்பதே எங்களது தற்போதைய நம்பிக்கை.
மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும். புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான மற்றும் முக்கியமான இடத்தில் இருக்கிறோம். அதனால் கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.