ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம் – கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

டெல்லி ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் உறுப்பினர் சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, அவரைப் பார்ப்பதற்காக, அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் சுவாதி மாலிவால், 4 நாட்களுக்கு முன்பு கெஜ்ரிவால் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, கெஜ்ரிவாலின் தனிச் செயலாளராக இருக்கும் பிபவ் குமார் என்பவர், சுவாதி மாலிவாலிடம் தவறாக நடந்து கொண்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சுவாதி மாலிவால் தொலைபேசி மூலம் புகார் அளித்த நிலையில், நேற்று அவரது வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார் சுமார் 4 மணி நேரம் சுவாதி மாலிவாலிடம் வாக்குமூலம் பெற்றனர். மேலும், எழுத்துப் பூர்வமாகவும் புகார் பெற்ற போலீசார், கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட பிபவ் குமார் இன்று காலை 11 மணிக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுவாதி மாலிவால், ”எனக்கு நடந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், பிற கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும், இந்த விவகாரத்தை பாஜக அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் சுவாதி மாலிவால் தெரிவித்தார்.

மேலதிக செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்! (Video)

10 ஆவது உலக நீர் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் நாளை இந்தோனேசியா பயணம்!

அமைச்சரவையில் இருந்து விஜயதாஸவை நீக்குங்கள்! – ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை.

நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து தமிழர்களை மேலும் புண்படுத்தாதீர்! – அரசிடம் மைத்திரி வேண்டுகோள்.

O/L பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

பிள்ளைகள் வெளிநாட்டில்! மன விரக்தியடைந்த தந்தை உயிர்மாய்ப்பு!! – யாழில் சோகம்.

இலங்கை, இந்திய மீனவர்கள் 17 பேர் சிறப்பிடிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அமைதியான பிரார்த்தனைக்கு ஆறு. திருமுருகன் வேண்டுதல்!

விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு அனுப்பப்படும்! – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு.

ரஷ்யாவிற்கு கூலிபடையினராக படையினரை அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் -முகாமையாளர் கைது.

கட்டுநாயக்க ஊழியர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தேன் – பிரசன்ன ரணவீர.

மினுவாங்கொடையில் உள்ள ஒரேயொரு தமிழ் மொழி கல்லூரி மாணவர்களுக்கு புவியியல் 1ம் தாள் வழங்கப்படவில்லை.

இராணுவத்தை பாதிக்கு மேல் குறைக்க ஜனாதிபதியும் பாதுகாப்பு சபையும் தயார்!

Leave A Reply

Your email address will not be published.