18-வது ஓவரில் கிரிக்கெட் களத்தில் தெறிக்க விட்ட ராஜஸ்தான் அணி..
கிரிக்கெட் களத்தில் தெறிக்க விட்ட ராஜஸ்தான் அணி.. திருப்பு முனையாக அமைந்த 18-வது ஓவர்
ஐபிஎல் 11வது சீசனின் 9வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் களம் கண்டன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஈஸியாக தனது 20 ஓவர்களையும் விளையாடியது பஞ்சாப், அகர்வால் சதம், முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் என 223 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி.
224 ரன்கள் என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய போதிலும் பட்லர் 42 பேர் மட்டுமே எடுத்தார். 26 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஸ்மித் அடுத்த பந்தில் அவுட் ஆனார்.
இதையடுத்து களமிறக்கப்பட்ட தேவாட்டியா அதிரடியாக ரன் குவிப்பார் என்று நினைத்தால் சரியான டைமிங் கிடைக்காமல் திணறினார். கடைசி 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவை என்ற நிலை ராஜஸ்தானுக்கு ஏற்பட்டது.
18-வது ஓவரே இந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறலாம். திருப்பு முனையான இந்த ஓவரில் முதல் பந்தை சிக்சராக பறக்க விட்டார் தேவாட்டியா. அதுவரை திணறி வந்த அவர் சிக்சருக்கு பின்னர் மகா தாண்டவம் ஆடி 2,3,4 பந்துகளில் சிக்சர் ஐந்தாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை, கடைசி பந்தில் ஒரு சிக்சரை பறக்க விட்டார், தேவாட்டியா. இந்த ஒரு ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவித்தார்.
கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் உத்தப்பா ஆட்டத்தை இழக்க புதிதாக களமிறங்கிய ஆச்சாரி எந்தவித நெருக்கடியும் இல்லாமல் முதல் 2 பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். இதன் மூலம் 9 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.
எனினும் விடாது மீண்டும் ஒரு சிக்சர் அடித்த தேவாட்டியா 30 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதையடுத்து கடைசி ஓவரில் 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கடைசியாக களம் இறங்கிய ஆர்ச்சர் பதற்றமே இல்லாமல் பவுண்டரி அடித்து வெற்றியை கைப்பற்றினார்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடித்து ராஜஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தார் தேவாட்டியா. கிரிக்கெட் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.